240 ஆக எம்.பிக்கள் அதிகரிப்பர்
10-01-2017 08:57 AM
Comments - 0       Views - 103

அழகன் கனகராஜ்

தேர்தல்கள் எல்லை நிர்ணயக் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக, தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 225இலிருந்து 240ஆக அதிகரிக்கவிருப்பதாக அறியமுடிகிறது. 

அதனடிப்படையில், எம்.பிக்களின் எண்ணிக்கை 15ஆல் அதிகரிக்கப்படவிருக்கின்றது. 

அதற்கு மேலதிகமாக, மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் உள்ளிட்ட உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 4,250 இலிருந்து 8,500 வரையிலும் அதிகரிப்பதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவித்தன. தேர்தல்கள் எல்லை மற்றும் தேர்தல்கள் முறைமை தொடர்பில் அறிக்கை தயாரிப்பதற்காக, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் நியமிக்கப்பட்ட அசோக பீரிஸ் தலைமையிலான குழுவின் அறிக்கையிலேயே, மேற்கண்ட விடயங்கள் உள்ளக்கப்பட்டுள்ளன. 

"240 ஆக எம்.பிக்கள் அதிகரிப்பர்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty