2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தெரியாத வேலைகளைக் கற்று உணர்க

Princiya Dixci   / 2017 ஜனவரி 10 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடமையில் கரிசனையற்றவன் கடவுளைத் திட்டக்கூடாது. இன்று பலரும் நல்லது நடந்தால் கடவுளுக்குப் படையல் வைப்பார்கள். தீயவை நடந்தால் எல்லாமே பொய் என்பார்கள்.  

எங்களுக்கு எவற்றை முழுமையாகச் செய்ய முடியுமோ அதனைச் செய்து முடித்தால் முழுமையான மனிதனாகலாம்.  

அரைகுறையாக எதனையும் செய்வதால் செய்கருமங்களில் வெறுப்புத்தான் மிஞ்சும். தெரியாத வேலைகளைக் கற்று உணர்க.  

இன்று வைத்தியத்துறையில் ஒவ்வொரு மனித அவயவங்களுக்கும் எனப் பிரத்தியேகமாக வைத்திய நிபுணர்கள் வந்துவிட்டார்கள். கல்வித்துறையில் தனித்தனியாக ஆயிரமாயிரம் துறைகள் ஏற்படுத்தப்பட்டு விட்டன.  

கல்வியில் செறிவூட்டல் ஒவ்வொரு வினாடியும் படுவேகமாகி விட்டது. இந்நிலையில் எங்கள் வேலையின் தரத்தை உயர்த்தியேயாக வேண்டும். தெளிவான புரிதல் இல்லாமல் உயர்வடைவது எங்ஙனம்?  

கடமையில்தான் கடவுளைக் காணமுடியும்.

வாழ்வியல் தரிசனம் 10/01/2017

பருத்தியூர் பால – வயிரவநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .