டெங்குக்கு இடமளித்த நால்வருக்கு அபராதம்
10-01-2017 03:13 PM
Comments - 0       Views - 12

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னாரில் டெங்கு நுளம்பு பரவும் வகையில் தமது வீட்டுச் சூழலை வைத்திருந்த வீட்டு உரிமையாளர்கள் 4 பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா நேற்று உத்தரவிடடார்.

மன்னார் பொது சுகார வைத்திய அதிகாரியால் தாக்கல் செய்யப்பட்ட  வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான குழுவினர் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள மக்கள் குடியிறுப்புக்கள் மற்றும் பொது இடங்கள் போன்றவற்றில் தொடர்ச்சியாக டெங்கு சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

"டெங்குக்கு இடமளித்த நால்வருக்கு அபராதம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty