ஆரோக்கியமான உணவுக்கு உலக உணவுத் திட்டம் பங்களிப்பு
10-01-2017 03:15 PM
Comments - 0       Views - 13

“போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் 1,60,000 வரையான மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவு வழங்குவதற்கு உலக உணவுத் திட்டம் பெரும் பங்களிப்பை வழங்குகின்றது" என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

உலக உணவுத்திட்ட நிறுவனத்தின் பாடசாலை மாணவர்களுக்கு உணவு ஊட்டும் திட்டத்தின் வடக்கு மாகாணத்துக்குரிய இந்த ஆண்டின் தொடக்க நிகழ்வு, வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் திங்கட்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் மூலம் வடக்கு மாகணத்தில் 964 பாடசாலைகளில், தரம் 1 தொடக்கம் 9வரை கல்விபயிலும் 1,60,000 வரையான மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கை குறைந்த ஒரு தொகையல்ல. இது வடக்கு மாகாணத்தின் மொத்த சனத்தொகையில் 13 விழுக்காடு. இதன் மூலம் உலக உணவுத்திட்டம் வடக்கில் ஆரோக்கியமான ஒரு எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதில் பெரும் பங்களிப்பை நல்கி வருகிறது” என்றார்.

"ஆரோக்கியமான உணவுக்கு உலக உணவுத் திட்டம் பங்களிப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty