X


மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்
10-01-2017 06:31 PM
Comments - 0       Views - 13

-கே.கண்ணன

தாண்டிக்குளம் பகுதியில் ஏ-9 வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞன், வேகக்கட்டுப்பாட்டினை இழந்த நிலையில், இன்று விபத்துக்குள்ளாகியுள்ளார்.

படுகாயமடைந்த இளைஞன், பொதுமக்களால் மீட்கப்பட்டு, வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் 26 வயது இளைஞனே படுகாயமடைந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

"மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty