ஐ.அமெரிக்கத் தாக்குதலில் ஐ.எஸ் ஆயுததாரிகள் 25 பேர் பலி
10-01-2017 01:05 PM
Comments - 0       Views - 26

கிழக்கு சிரிய மாகாணமான டெய்ர் அஸ் ஸோரில், ஐக்கிய அமெரிக்காவின் சிறப்புப் படைகள், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவுக்கெதிராக நடவடிக்கையை மேற்கொண்டதாக, அதிகாரியொருவரும் மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகமும் தெரிவித்துள்ளனர்.  

அல்-குபார் கிராமத்தில், கடந்த ஞாயிற்றுககிழமை (08) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையொன்றில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவைச் சேர்ந்த ஆயுததாரிகள் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டதாக, தரையிலுள்ள தமது தொடர்புகளின் மூலம் சிரிய மோதலை கண்காணிக்கும், ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.  

இந்நிலையில், கிழக்கு மாகாணமான டெய்ர் அஸ் ஸோரில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவின் தலைவர்களுக்கெதிராக, வெற்றிகரமான நடவடிக்கையொன்றை, ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான கூட்டணி மேற்கொண்டதாக, பென்டகன் பேச்சாளரொருவர் நேற்று  தெரிவித்துள்ளார்.  

ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவின் தலைமைத்துவத்தை இலக்கு வைத்த இந்த  நடவடிக்கை, ஐக்கிய அமெரிக்காவின் சிறப்புப் படைகளின் பிரிவினால், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவின் தலைவர்களை கண்டுபிடிக்கும் நோக்கத்தில் நடத்தப்பட்டதாக, கடற்படை கப்டன் ஜெப் டேவிஸ் தெரிவித்துள்ளார்.   குறித்த நடவடிக்கையில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவின் ஆயுததாரிகள் 25 பேர் கொல்லப்பட்டனர் என்ற, மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கைகளை, அதிகம் மிகைப்படுத்தப்பட்டவை என டேவிஸ் தெரிவித்துள்ளார்.  

இந்த நடவடிக்கை, டெய்ர் அஸ் ஸோர் மாகாண செய்திகளை வெளியிடும் டெய்ர்அஸோர் செய்தி முகவரகத்தாலேயே வெளிப்படுத்தப்பட்டிருந்தது. மேற்கூறப்பட்ட கிராமத்துக்கு அருகில் 90 நிமிடங்கள் மோதல் இடம்பெற்றதாக தெரிவித்த குறித்த முகவரகம், தாக்குதல் ஜெட்கள் இரண்டினால் ஆதரவளிக்கப்பட்ட கூட்டணித் துருப்புகள், நான்கு ஹெலிகொப்டரில், சம்பவ இடத்துக்கு வந்தடைந்ததாகத் தெரிவித்துள்ளது. இது தவிர, மோதலில் கொல்லப்பட்டவர்களின் குறிப்பிட்ட எண்ணிக்கையான உடல்களை, தம்முடன் ஐக்கிய அமெரிக்கப் படைகள் எடுத்துச் சென்றதாகவும், சிலரைக் கைது செய்ததாகவும் தெரிவித்துள்ளது.   

"ஐ.அமெரிக்கத் தாக்குதலில் ஐ.எஸ் ஆயுததாரிகள் 25 பேர் பலி " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty