ட்ரம்ப்பின் சிரேஷ்ட ஆலோசகராக மருமகன்
10-01-2017 07:20 PM
Comments - 0       Views - 187

உலகம் முழுவதிலும் ஜனநாயகத்துக்கு ஆதரவான பிரசாரங்களை மேற்கொண்டுவரும் ஐக்கிய அமெரிக்கா, டொனால்ட் ட்ரம்ப்பின் ஜனாதிபதிக் காலத்தின் கீழ், பாரிய மாற்றங்களைச் சந்திக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஓர் அங்கமாக, தனக்கு நெருக்கமானவர்களையும் உறவினர்களையும், ஆட்சிக்கான பொறுப்புகளில் அவர் அமர்த்தி வருகிறார். 

இதில் முக்கியமானதாக, வெள்ளை மாளிகையின் சிரேஷ்ட ஆலோசகராக, ட்ரம்ப்பின் மருமகன் ஜரெட் குஷ்னர் நியமிக்கப்படவுள்ளதாக, ட்ரம்ப்பின் குழு அறிவித்துள்ளது. ட்ரம்ப்பின் மூத்த மகளான இவங்கா ட்ரம்ப்பை, குஷ்னர் மணமுடித்துள்ளார். 

ஐ.அமெரிக்காவின் குடும்ப ஆட்சி தொடர்பான சட்டங்கள், மிகவும் கடுமையானவை. ஆனால், ஜனாதிபதிக்கு, அவ்வாறான கட்டுப்பாடுகள் கிடையாது. எனினும், குடும்பத்தவர்களை உயர்வான பதவிகளில் வைத்திருப்பதை, ஜனாதிபதிகள் தவிர்த்தே வந்தனர்.  

இந்நிலையிலேயே, வர்த்தகம் தொடர்பாகவும் மத்திய கிழக்கு நாடுகள் தொடர்பாகவும் ஆலோசனை வழங்குபவராக, குஷ்னர் பணியாற்றவுள்ளார்.  இராஜதந்திர அனுபவங்கள் எவையுமற்றவர். அவர், மத்திய கிழக்குப் போன்ற சிக்கலான பிரச்சினையில், எவ்வாறு ஆலோசனை வழங்குவார் என்ற கேள்வி எழுகிறது. 

குறிப்பாக, இஸ்‌ரேலுக்கான ஐ.அமெரிக்கத் தூதரகத்தை, டெல் அவிவ்-இலிருந்து, ஜெருசலேத்துக்கு மாற்றவுள்ளதாக ட்ரம்ப் வெளியிட்ட திட்டத்துக்கு, பலஸ்தீனத்திலிருந்து கடும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டுவரும் நிலையிலேயே, குஷ்னரின் பதவி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.   

"ட்ரம்ப்பின் சிரேஷ்ட ஆலோசகராக மருமகன் " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty