முன்னாள் வீரருக்குத் தடை
10-01-2017 10:25 AM
Comments - 0       Views - 13

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் டென்னிஸ் வீரரான நிக் லின்டாலுக்கு, 7 ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, 35,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. போட்டி நிர்ணயம் தொடர்பான குற்றச்சாட்டிலேயே, இத்தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.

2013ஆம் ஆண்டு இடம்பெற்ற அவுஸ்திரேலிய தொடரொன்றில், போட்டியொன்றில் தோல்வியடைவதற்கு, லின்டால் திட்டமிட்டார் என, டென்னிஸ் ஒழுக்கநெறிப் பிரிவு தெரிவித்தது. அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரன்டன் வோல்க்கின், ஐஸாக் ஃபுறொஸ்ட் ஆகியோர், இவ்விடயத்தில் அபராதத்துக்கு உள்ளாக்கப்பட்டனர்.

தற்போது 28 வயதான லின்டால், 2013ஆம் ஆண்டிலேயே, தொழில்முறைப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றிருந்தார். உயர்ந்தபட்சமாக, 2010இல் தரப்படுத்தலில் 187ஆவது இடத்தை அவர் அடைந்திருந்தார்.

"முன்னாள் வீரருக்குத் தடை " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty