சம்பியனாது வதிரி டயமன்ஸ் அணி
09-01-2017 06:53 AM
Comments - 0       Views - 39

- கே.கண்ணன்

அல்வாய் மனோகரா சவால் கிண்ணத்துக்கான கால்பந்தாட்டத் தொடரில், பலத்த போராட்டத்துக்கு மத்தியில், வதிரி டயமன்ஸ் அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளது.

மனோகரா விளையாட்டுக் கழகம் நடாத்திய, யாழ். மாவட்ட அணிகளுக்கிடையிலான கால்பந்தாட்டத் தொடரில் இறுதிப் போட்டி, கழக மைதானத்தில், கடந்த வாரயிறுதியில் மின்னொளியில் நடைபெற்றது.

இறுதிப் போட்டியில், யாழ். சென். நீக்கிலஸ் அணியை எதிர்த்து வதிரி டயமன்ஸ் அணி மோதியது. முதற்பாதியில், இரண்டு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல என்பதை நிரூபிக்கும் முகமாக விளையாடிக் கொண்டிருந்தனர. இதனால், இரண்டு அணிகளாலும் கோலெதுவும் பெறப்படாமலேயே முதற்பாதி நிறைவடைந்தது.

இடைவேளைக்கு பின்னரான ஆட்டத்தில், டயமன்ஸ் அணி வீரர் துசிகரன் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, போட்டியின் 37வது நிமிடத்தில் ஒரு கோலைப் பெற, போட்டி விறுவிறுப்பின் உச்சக்கட்டத்தை எட்டியது. போட்டியின் 58ஆவது நிமிடத்தில், சென். நீக்கிலஸ் அணி வீரர் முறையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்த, டயமன்ஸ் அணிக்கு பெனால்டி கிடைத்தது. இதனைச் சரியாக பயன்படுத்தி, அவ்வணி வீரர் உஷானந் கோலாக்க, ஆட்டநேர முடிவில், 2-0 என்ற கோல் கணக்கில் டயமன்ஸ் அணி வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துள்ளது.

இறுதிப் போட்டியின் நாயகனாக டயமன்ஸ் அணியைச் சேர்ந்த உஷானந்,  தொடர் நாயகனாக சென். நீக்கிலஸ் அணி வீரர் றொக்சன்,  சிறந்த கோல் காப்பாளராக டயமன்ஸ் அணியைச் சேர்ந்த ஜெனார்த்தனன்,  சிறந்த பின்கள வீரராக சென் நீக்கிலஸ் அணி வீரர் ஜெயராஜ் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

"சம்பியனாது வதிரி டயமன்ஸ் அணி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty