தேசிய வர்த்தகச் சிறப்பு விருதுகள் 2016இல் CDBக்கு விருது
11-01-2017 09:25 AM
Comments - 0       Views - 18

தேசிய வர்த்தக சம்மேளனத்தின் மூலம் ஒழுங்கு செய்யப்பட்ட,தேசிய வர்த்தகச்சிறப்பு விருதுகள் விழாவில் வங்கியல்லாத நிதிச்சேவைகள் துறையில், CDB தங்க விருதை வென்றெடுத்ததுடன், நிர்வாக சித்தாந்தங்களை உறுதிப்படுத்துதலில் அதன் சமரசத்துக்கு இடமில்லாத நிலைப்பாட்டுக்காக, கூட்டாண்மை ஆட்சிமுறை மேன்மைக்கான ஒட்டுமொத்த மெரிட் விருதையும் பெற்றிருந்தது. துறைசார் ஜாம்பவான்கள் முன்னிலையில் போட்டியிட்டு CDB வென்ற இவ்விரு விருதுகளும், நாட்டின் வங்கியல்லாத நிதிச்சேவைகள் துறையில் நிறுவனத்தின் தலைமைத்துவத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.  

CDB ன் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹேஷ் நாணயக்கார கருத்து தெரிவிக்கையில், “எமது நிதிசார் தளத்தில் மட்டுமன்றி எமது வலிமையுடன் இணைக்கப்பட்ட சீரான முடிவுகளை நாம் வெளிப்படுத்தி வருகிறோம். மேலும் எமது சமூக மேம்பாட்டு ஊடாக, அடிப்படை நிதி உள்ளடக்க தத்துவத்தை பிரதிபலித்து வருகிறோம். CDBஇன் முக்கிய அம்சங்களான ஸ்திரத்தன்மை, உறுதி மற்றும் நீடிப்பு போன்றவற்றை இவ்விருது, பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. தேசிய அபிவிருத்திக்கு பங்களிப்பு வழங்கும் குடிமக்களின் நீடித்தப் பொருளாதார மேம்பாட்டைக் கட்டியெழுப்பும் வகையிலமைந்த வர்த்தகத்தை நாம் முன்னெடுத்து வருகிறோம்” என்றார்.  

தெரிவு செய்யப்பட்டப் பிரிவுகளில் ஒட்டுமொத்த செயற்திறனை வெளிப்படுத்தும் நிறுவனங்கள் தேசிய வர்த்தக மேன்மை விருதுகள் ஊடாக அங்கிகரிக்கப்படுவதுடன், வெற்றியீட்டும் நிறுவனங்கள் தொழிற்றுறைக்கு முன்மாதிரியாக நிலைநிறுத்தப்படும். இந்த அங்கிகாரம் ஊடாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ரீதியில் நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதுடன், தரம், புத்துருவாக்கம், உற்பத்தி விருத்தி, ஆட்சி, நெறிமுறைகள் மற்றும் வெளிப்படைத்தன்மை போன்றவையும் தொடர்ச்சியாக ஊக்குவிக்கப்படுகின்றன. CDBஇன் தொடர்ச்சியான ஸ்திரத்தன்மை, புத்துருவாக்கத் திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி நிரல் மற்றும் அசைக்க முடியாத ஆட்சிமுறை ஆகியவை இந்நிறுவனம் இவ்விருதுக்கு தகுதியானது என்பதை நடுவர் குழுவை ஏற்றுக்கொள்ளச் செய்தது.  

CDBபொருளாதார, சமூக மற்றும் சூழல் ஒழுங்குநெறிகளுடன் பொது நிதிக் காப்பாளர் எனும் வகையில் நிர்வாகம், கணக்கியல், பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மை போன்றவற்றை வலியுறுத்தி அதன் தலைமைத்துவத்தைக் கொண்டுள்ளதுடன், உள்நாட்டு மற்றும் உலகளவில் பல்வேறு விருது விழாக்களில் கௌரவிக்கப்பட்டுள்ளது. “பொதுமக்கள் வைப்புகளைப் பெறும் பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை நிறுவனம் எனும் அங்கிகாரத்தை நாம் பெற்றுக் கொண்டுள்ளோம். எமது 69 கிளைகள் ஊடாக எமது இலாபகரத்தன்மை, சொத்துக்கள் மற்றும் பங்கு உரிமைதாரர் நிதி போன்றவற்றின் உறுதியான வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கப்பட்டு வருவதுடன், அதிநவீனத் தொழில்நுட்ப அடித்தளமானது, எமது பங்குதாரர் ஈடுபாட்டு செயல்பாட்டுக்கு அனுகூலங்களை வழங்க வழிவகுத்துள்ளது” என மேலும் அவர் தெரிவித்தார்.  

"தேசிய வர்த்தகச் சிறப்பு விருதுகள் 2016இல் CDBக்கு விருது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty