கிளிநொச்சியில் 14 பேருக்கு டெங்கு
11-01-2017 02:36 PM
Comments - 0       Views - 12

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சியில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவிவருவதாகவும் கடந்த ஒரு சில நாட்களில் மட்டும், 14  பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டிக்கிறது என்றும், மாவட்ட சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில், டெங்குக் காய்ச்சலானது மிகத் தீவிரமாகப் பரவக்கூடியஅபாயநிலை அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே பொது மக்களை அவதானமாக இருக்குமாறுஉயிர்கொல்லி  டெங்கு நோயிலில் இருந்து  பாதுகாத்து கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும்,காய்ச்சல் இரண்டு நாட்களிற்கு மேல் நீடித்தால்உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலைகளில் உரிய பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும்,மாவட்டத்திலுள்ள கர்ப்பிணிகள், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், முதியவர்கள்காய்ச்சல் ஏற்பட்டவுடன் அருகில் உள்ள அரச வைத்தியசாலையை சென்று சிகிசையை பெற்றுக்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பல மாவட்டங்களில் வேகமாகப் பரவிவரும் டெங்குக் காய்ச்சலானது தற்போது கிளிநொச்சி மாவட்டத்திலும் கால்பதித்துள்ளது.  கடந்த வருடம் வரை டெங்கு  நோய் அற்ற மாவட்டமாக கிளிநொச்சி காணப்பட்டு வந்தது.ஆனால் தற்போது  2017ஆம் வருடத்தின் முதல்ஏழு நாட்களில்  கிராஞ்சி, சிவபுரம், மலையாளபுரம், அம்பாள்குளம், கணேசபுரம்,  வலைப்பாடு, கல்மடு, செல்வாநகர் மற்றும் விசுவமடு ஆகிய, இடங்களிலிருந்து பதினான்கு போ்  டெங்குக்காய்ச்சல் காரணமாக கிளிநொச்சிப் பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவும் மாவட்ட வைத்தியசாலையினா் தெரிவித்துள்ளனா்.

எனவே வேகமாக பரவிவரும் டெங்கு காச்சலில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறும்  டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை இனம் கண்டு முற்றாக அழித்தொழிக்குமாறு   சுகாதார பிரிவினா் அவசர அறிவித்தலை விடுத்துள்ளனா்

"கிளிநொச்சியில் 14 பேருக்கு டெங்கு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty