2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

1,250 பஸ்கள் இறக்குமதி

Menaka Mookandi   / 2017 ஜனவரி 16 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குரிய பஸ்களின் எண்ணிக்கையை, இவ்வாண்டில் 7,250ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக,போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் பிரதியமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.
அந்த வகையில், இவ்வருடத்தில் மாத்திரம் 1,250 புதிய பஸ்களைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குருநாகலில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,
'இந்த வருடத்துக்குள் இரண்டு கதவுகள் அடங்கிய ஆயிரம் பஸ்களையும் தனிக் கதவுகளைக் கொண்ட 250 பஸ்களையும் இறக்குமதி செய்து,சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது 5,500 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன. இந்த நிலையில், மேலும் புதிதாக 1இ250 பஸ்களை இறக்குமதி செய்வதன் ஊடாக, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்களின் எண்ணிக்கையை 7,250 வரை அதிகரிக்கப்படும்.
மேலும், புதிதாக 12 ரயில் என்ஜின்களும் 6 ரயில் இயந்திரத் தொகுதிகளும், 160 ரயில் பெட்டிகளையும் கொள்வனவு செய்து,சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது 25 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களைப் பயன்படுத்துகின்றனர். சுமார் 75 இலட்சம் மக்கள், தனியார் பஸ்களில் பயணிக்கின்றனர். ரயில்களில் நாளாந்தம் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர்.
இந்தப் பயணிகளுக்குரிய வசதிகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கிலேயே, இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன' என்று அவர் மேலும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X