2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு இல்லை

Shanmugan Murugavel   / 2017 ஜனவரி 12 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் தமிழ்நாட்டில், இம்முறை பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடத்தத் திட்டமிட்டிருந்த ஏராளமானோருக்கு, ஏமாற்றமே விஞ்சியுள்ளது. ஜல்லிக்கட்டுத் தொடர்பான தமது தீர்ப்பை, பொங்கல் தினமான சனிக்கிழமை வரை அறிவிக்கப் போவதில்லை என, இந்திய உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளமையாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. 

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு, இடைக்கால நிவாரணத்தைப் பொங்கலுக்கு முன்னர் வழங்குமாறு கோரப்பட்டிருந்த நிலையில், அதை “நியாயமற்ற கோரிக்கை” என வர்ணித்த உச்சநீதிமன்றம், அந்தக் கோரிக்கையை விசாரிக்க மறுத்தது. 

ஜல்லிக்கட்டுக்கு, 2014ஆம் ஆண்டு மே மாதத்தில், உச்சநீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டது. காளைகள், ஆற்றுகை விலங்குகளாகக் கருதப்பட முடியாது என அறிவித்த உச்சநீதிமன்றம், அதன் மூலம் ஜல்லிக்கட்டையும் மாட்டுவண்டில் சவாரியையும் தடை செய்தது. 

எனினும், ஆற்றுகை விலங்குகள் பட்டியலிலிருந்து காளைகளை நீக்குவதற்கு, பா.ஜ.க அரசாங்கத்தால் 2016ஆம் ஆண்டு, முடிவெடுக்கப்பட்டது. இதன்மூலம், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வாய்ப்பு ஏற்படும். அது தொடர்பான விசாரணைகளை, உச்சநீதிமன்றம் மேற்கொண்டு வந்தது. 

இந்நிலையில், நேற்றைய அமர்வில் கருத்துத் தெரிவித்த நீதியரசர்கள், இது தொடர்பான தீர்ப்பை, ஏற்கெனவே வரைந்துள்ளதாகவும், ஆனால் அதை இப்போதே அறிவிக்க முடியாதெனவும் தெரிவித்தனர்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .