நெரிசலை சமாளிப்பதற்கு மத்தள தொழிற்படுகிறது
17-01-2017 05:05 PM
Comments - 0       Views - 141

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளம் பகல் வேளைகளில் எட்டு மணித்தியாலங்கள் மூடப்பட்டுள்ளதன் காரணமாக, மத்தள விமான நிலையம் பயன்படுத்தப்படுவதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடக முகாமையாளர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

புனரமைப்பு பணிகளுக்காக ஜனவரி மாதம் 6ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி வரை, காலை 8.30 மணி முதல் மாலை 4.30 வரையில் கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதை மூடப்பட்டிருக்கும்.

மத்தள விமான நிலையத்திலிருந்து வாராந்தம் எட்டு விமானங்கள் சீனாவுக்கு பயணிக்கின்றன.

இதன்படி, காலை 7.25, 7.35 ஆகிய நேரங்களில் சீனாவின் பெய்ஜிங் மற்றும் சங்காய் ஆகிய நகரங்கள் நோக்கிப் பயணிக்கும் விமானங்களை மத்தளவில் தரையிறங்கி, மூன்று மணித்தியாலங்களின் பின்னர் மீளவும் பயணிப்பதாக தெரிவித்துள்ளார்.

கால தாமதம் ஏற்படுமாயின் பயணிகளுக்கு தேவையான வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

"நெரிசலை சமாளிப்பதற்கு மத்தள தொழிற்படுகிறது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty