2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மொரஹாகந்தையினால் சிக்குண்ட உயிரினங்கள் மீட்கப்பட்டன

Kogilavani   / 2017 ஜனவரி 17 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-காஞ்சன குமார ஆரியதாச

மொரஹாகந்த நீர்த்தேக்க திட்டத்துக்குள் உள்வாக்கப்படும், பிரதேசங்களில் வாழும் உயிரினங்களை பாதுகாப்பாக, மீட்டெடுப்பதற்கு  நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக, மேற்படி நீர்த்தேக்க திட்டத்தின் கருத்திட்ட அதிகாரி பீ.ஜீ.தயானந்த தெரிவித்தார்.

இப்பகுதிகளிலுள்ள உயிரினங்களை உயிருடன் மீட்பது தொடர்பில் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

உயிரினங்களை மீட்கும் நடவடிக்கை, மூன்றாவது நாளாக திங்கட்கிழமையும் தொடர்ந்தது.  வனவிலங்குகள் திணைக்களம், தேசிய உயிரியில் பூங்கா,  உயிர் பாதுகாப்பு பொலிஸ் பிரிவு, மஹாவலி அதிகாரி சபை மற்றும் ஏனைய அரச திணைக்களங்கள் இணைந்து,  உயிரினங்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

தற்போதைய நிலையில்,  இப்பகுதிகளிலுள்ள உயிரினங்கள் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன.   மிக நீண்டகாலமாக, உயிரினங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் தீங்குகளைத் தடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீர்த்தேக்கத்தை பார்வையிட வரும் மக்கள், உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடாது” என்று அவர் கோரியுள்ளார்.

மொஹாகந்த நீர்த்தேக்கத்துக்கு நீர் பாய்ச்சும் ம       ங்கல நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடந்த 11 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வைத் தொடர்ந்து, இதுவரை ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த நீர்த்தேக்கத்தை பார்வையிட்டுள்ளனர்.

இதுவரை இப்பகுதிகளிலிருந்து மான், எலி, பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் உயிரினங்களை மீட்கும் நடவடிக்கை தொடரும் என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .