2024 மார்ச் 28, வியாழக்கிழமை

'ஓரினச்சேர்க்கை ஒத்துவராது: அமைச்சரவையில் கடும் எதிர்ப்பு

Kanagaraj   / 2017 ஜனவரி 17 , பி.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனித உரிமைகள் தொடர்பிலான செயற்றிட்டத்தில் உள்ளக்கப்பட்டுள்ள ஓரினச்சேர்க்கை, குற்றமற்றது என்ற உறுப்புரை உள்ளிட்ட சர்சைக்குரிய உறுப்புரைகள் பலவற்றுக்கு நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதாக தகவல்; தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்குச் சென்றிருந்த அமைச்சர்களில் பலர் இந்த யோசனைக்கு, தங்களுடைய கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளதாக அறியமுடிகிறது.

வெளிவிவகார அமைச்சினாலேயே இந்த யோசனைகள் அடங்கிய அமைச்சரவைப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஓரினச்சேர்க்கை, குற்றமற்றது என்ற உறுப்புரை உள்ளிட்ட சர்சைக்குரிய உறுப்புரைகளை நீக்கிவிட்டு, புதிய அமைச்சரவைப் பத்திரமொன்றைத் தாக்கல் செய்யுமாறு, ஜனாதிபதி பணிப்புரை வழங்கியதாகவும் அறியமுடிகிறது.
இதேவேளை, மேற்குறிப்பிட்ட உறுப்புரைகளுக்கு ஜனாதிபதியும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்ததாக உள்ளகத் தகவல்களிலிருந்து அறியமுடிகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X