2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உலகளாவிய வாய்ப்புகளை வழங்கும் HSBC கடன் அட்டைகள்

Gavitha   / 2017 ஜனவரி 18 , பி.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தாண்டில் ஆசைக்கனவுகளை நனவாக்கி வசதியான வாழ்க்கையை அனுபவித்திட, HSBC கடன் அட்டைக்கு விண்ணப்பித்து, உலகளாவிய நன்மைகளையும் சலுகைகளையும் பெறுவதற்கு அது வாய்ப்பைப் பெற்றுக்கொள்ளுமாறு HSBC அறிவித்துள்ளது. 

அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் கொள்வனவு முதல் ஆடம்பர சாதனங்களின் கொள்வனவு வரை, குதூகல பொழுதுபோக்குகள் முதல் உல்லாசமான விடுமுறைப் பயணங்கள் வரை, சகல தேவைகளையும் இலகுவாகவும் செலவுச் சுருக்கமாகவும் நிறைவேற்ற HSBC கடன் அட்டைகள் உதவுமென வங்கி மேலும் தெரிவித்துள்ளது. HSBC கடன் அட்டைகள் வைத்திருப்பவர்கள் பல்வேறு துறைகளில் ஏராளமான சேவைகள், விசேட சலுகைகள் மற்றும் பெறுமதிச் சேர்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள முடியும். 

நீண்ட காலமாகக் கனவு கண்ட இடத்திற்குப் பயணத்தை மேற்கொள்ள விரும்பினால் அல்லது உங்கள் உடல் நலத்தைப் பரிசோதிக்க விரும்பினால் HSBC கடன் அட்டையைப் பயன்படுத்தலாம். செலவழிக்கும் பணத்தை வட்டி எதுவுமற்ற 12 மாதாந்தத் தவணைகளில் மீளச் செலுத்த முடியும். இந்த ஜனவரி மாதத்தின் ஒவ்வொரு வார இறுதியிலும் அன்றாட அத்தியாவசியப் பொருட்களை கீல்ஸ் சுபரில் 1,500 ரூபாய்க்கு மேற்பட்டத் தொகைக்குக் கொள்வனவு செய்யும்போது, 20 பொருள்களுக்கு 20% விலைக்கழிவைப் பெற்றுக்கொள்ளலாம். நாடெங்குமுள்ள எந்தவொரு பெற்றோல் நிலையத்திலும் வாகனத்துக்கும் எரிபொருள் நிரப்பும்போது, ஒவ்வொரு வாரமும் ஒரு iPhone 7 அலைபேசியை வெல்லும் வாய்ப்பினைப் பெறலாம்.  

ஜனவரி முதல் மார்ச் வரையான காலப்பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஒரு வெற்றியாளர் தெரிவு செய்யப்படுவார். பிரபல உணவகம் ஒன்றில் உணவு வேளை ஒன்றை அருந்த விரும்பினால் அல்லது ஆரோக்கியமாக இருப்பதற்கு ஜிம்னாசியம் செல்ல விரும்பினால், வைத்தியசாலைகளில் வேறேதும் சிகிச்சையைப் பெற விரும்பினால் அல்லது www.wow.lk ஊடாக விசேட விலைக்கழிவுகளைப் பெற HSBC கடன் அட்டையைப் பயன்படுத்தலாம். 

HSBC சிற்றளவு வங்கிச் சேவை மற்றும் செல்வ முகாமைத் தலைவர் நிலந்த பஸ்தியன் கருத்துத் தெரிவிக்கையில், “அனைவரும் புத்தாண்டைக் கொண்டாடும் வேளையில், எமது வாடிக்கையாளர்கள் தமது அபிலாஷைகளையும் விருப்பங்களையும் இலகுவாக நிறைவேற்றுவதற்கு உதவ வேண்டுமென நாம் எண்ணினோம். அதன் காரணமாகவே “One Step Closer” என்ற ஊக்குவிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். நாம் வழங்கும் கடன் அட்டைகள்,பிரத்தியேகக் கடன்கள் போன்ற வசதிகளைப் பயன்படுத்தி எமது வாடிக்கையாளர்கள் புத்தாண்டை மகிழ்ச்சிகரமாகக் கொண்டாடுவதுடன், தமது ஆசைகளையும் நிறைவேற்றிக்கொள்ள முடியும் என்பதே எமது நோக்கமாகும்” என்றார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .