2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

எம்.ஜி.ஆரின் சத்துணவு திட்டம் ‘மாற்றத்தை தரும்“

Kogilavani   / 2017 ஜனவரி 18 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-டி.ஷங்கீதன்

“இந்தியாவின் முன்னால் முதலமைச்சரும் நடிகருமான மறைந்த எம்.ஜி.ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) அறிமுகம் செய்த சத்தணவு திட்டத்தை எதிர்காலத்தில், இலங்கையிலும் அறிமுகம் செய்ய முடியுமானால், அது நிச்சயமாக எமது மாணவர்களின் கல்வியிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்” என்று, கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

எம்.ஜி.ஆரின் 100ஆவது ஜனன தினம் யடியந்தோட்டையில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“இறந்து 30 வருடங்களை கடந்தும் ஒரு தலைவனை நினைவில் வைத்திருக்கின்றார்கள் என்றால் அது எம்.ஜி.ஆர் மட்டுமே என்று கூற வேண்டும். அதிலும் அரசியலிலும் நடிப்பிலும் இன்னும் அவரை மக்கள் மறந்துவிடவில்லை. குறிப்பாக மலையகத்தை பொறுத்தவரையில் ஒவ்வொரு தேர்தலிலும் அவருடைய பாடல்கள் இன்னும் ஒலிக்கின்றன.

எத்தனையோ புதிய பாடல்கள் இன்று இருந்தாலும் அன்று அவருடைய காலத்தில் ஒழித்த அந்த பாடல்களே இன்னும் ஒழிக்கின்றது, தேர்தல் மேடைகளில். அதற்கு காரணம், அவருடைய திரைப்படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் மக்களை மையப்படுத்தியதாகவே அமைந்திருந்தது. அதனை அவர் திரைப்படத்துக்கும் நடிப்புக்கும் மாத்திரம் மட்டுப்படுத்தாமல், அதனை நிஜ வாழ்க்கையில் செய்து காட்டியவர்.

இலங்கையில் பிறந்த ஒருவர் என்ற வகையில் அவருடைய 100ஆவது ஜனன தினத்தை நாம் இங்கு நினைவு கூர்வதற்கு முக்கிய காரணம், எமக்கும் இந்தியாவுக்கும் குறிப்பாக தமிழ் நாட்டக்கும் இருக்கின்ற அந்த உறவு இன்னும் பலமடைய வேண்டும் என்பதேயாகும்.

அவர் அறிமுகம் செய்த சத்தணவு திட்டம் தமிழ் நாட்டில் இன்றும் முன்னெடுக்கப்படுகின்றது.மாணவர்களுக்கு உணவு மாத்திரம் வழங்குவதைவிட அதனை ஒரு சத்துனவு திட்டமாக மாற்றியவர். அதனை இலங்கைகையிலும் அறிமுகம் செய்ய முடியுமானால், அது நிச்சயமாக எமது மாணவர்களின் கல்வியிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .