2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

உடல் உறுப்புகளை தானமாக வழங்குமாறு சாரதிகளிடம் கோரிக்கை

Princiya Dixci   / 2017 ஜனவரி 19 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்

புதிய மாற்றங்களுடன் கூடிய சாரதி அனுமதிப்பத்திரத்தை விநியோகிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது.

சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பப் படிவம் மற்றும் புதுப்பித்தல் படிவம் என்பவற்றில் உடல் உறுப்பு மற்றும் இழையங்களின் தானத்துக்கு சம்மதம் தெரிவிக்கும் கூற்று ஒன்றினை உள்ளட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகஅமைச்சரவையின் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன, தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றபோது, அவர் இதனைக் கூறினார்

“புதிய யோசனையை உள்ளடக்கி மறுசீரமைப்பதற்கும், வீதி விபத்துமூலம் மூளைச்சாவு மற்றும் குருதிச்சுற்றோட்ட செயலிழப்புக் காரணமாக இறக்க நேரிடும் சாரதிகளிடமிருந்து அவர்களின் உடல் உறுப்பு மற்றும் இழையங்களை தானம் செய்வதற்குரிய சம்மதத்தினை பெற நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள சாரதி அனுமதி பத்திரத்தில் அதனைக் காட்சிப்படுத்தக் கூடியவாறு திருத்தி மறுசீரமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது” என்றார்.

இதேவேளை, இந்த யோசனையை சுகாதார அமைச்சர்  ராஜித சேனாரத்னவே முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .