2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்திக்கான நிதி அதிகரிப்பு

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 19 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.ஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்திக்காக கடந்த வருடம் ஒதுக்கப்பட்ட 1,200 மில்லியன் ரூபாய் நிதியானது இந்த வருடத்தில் 3,000 மில்லியன் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது என அம்மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து பாலமுனை பிரதேச வைத்தியசாலைக்கு அச்சு இயந்திரம் வழங்கும் நிகழ்வு, புதன்கிழமை (18) மாலை நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.

இந்த நிதியின்; மூலம்  அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய இடங்களைக் கண்டறிந்து, அவ்வேலைத்திட்டங்களை முன்னெடுக்கப்பதுடன்,  வைத்தியசாலைகளையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கிழக்கு மாகாணத்திலுள்ள 2 தாதியர் பயிற்சிக் கல்லூரிகளில் பயிற்சிகளைப் பூர்த்தி செய்துகொண்டு,  வெளியேறும் தாதியர்கள் வெளி மாகாணங்களில் நியமனம் பெறும் நிலைமை காணப்படுகின்றது. எனவே, இங்குள்ள தாதியர் பயற்சிக் கல்லூரிகளில்; பயிற்சிகளைப் பூர்த்தி செய்யும்  தாதியர்களை இந்த வருடம் முதல் இம்மாகாணத்தில் நியமிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை கிழக்கு மாகாணசபை மூலமாக கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .