2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சொல்ஹெய்முக்கு மீண்டும் ஆர்வம்

Gavitha   / 2017 ஜனவரி 20 , மு.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்முடன் மீண்டும் செயற்பட வேண்டியுள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது. சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பிலேயே, அவருடன் இணைந்து செயற்படவேண்டியுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

உலக பொருளாதார அரங்கத்தின் நிகழ்ச்சி -நிரலுக்கு அப்பால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுவிற்ஸர்லாந்தில், சொல்ஹெய்முடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

சொல்ஹெய்ம், தற்போது ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் நிகழ்ச்சித் திட்டத்தில் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஆவார். அவர் இலங்கையுடன் தனது புதிய பதவி தொடர்பில் செயற்படச் சம்மதித்துள்ளார். 

பசுமை, பொருளாதாரம், நிலைபேறான சுற்றுலாத்துறை, வனராசிகள், நீர் என்பன தொடர்பில், இலங்கைக்கும் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் நிகழ்ச்சித் திட்டத்துக்கும் இடையில் பணியாற்ற சம்மதித்துள்ளதாக சொல்ஹெய்ம், டூவிட் செய்துள்ளார். 

இது தொடர்பாக கூட்டுச் செயற்பாடுகளுக்கான முன்மொழிவுகளை ஆராயவென, ஒரு குழுவை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .