2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதியால் புதிய ரக தேயிலை அறிமுகம்

Princiya Dixci   / 2017 ஜனவரி 21 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், மு.இராமசந்திரன்

தலவாக்கலை, சென்கூம்ஸ் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் 25 வருடகால ஆய்வுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக தேயிலை அறிமுகமும் குறுந்தகவல் மற்றும் தகவல் அறியும் நிலையமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், இன்று (21) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் வைத்தே, இந்த அறிமுக விழா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

இலங்கை தேயிலை பயிர் செய்கையின் 150ஆவது ஆண்டு நிறைவு மற்றும் தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் 92ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டே இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
தேயிலை பயிர்செய்கையின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு தேயிலைதுறை தொடர்பில், புத்தகம் ஒன்றும் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டது.

தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையம் 92 வருட வரலாற்றைக் கொண்டுள்ள போதிலும் நாட்டின் ஜனாதிபதியின் முதல் வருகையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வருகை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின் போது, அமைச்சர்களான அமைச்சர் நவின் திஸாநாயக்க, பழனி திகாம்பரம் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள், முக்கிய அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .