2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

'நல்லாட்சி அரசாங்கத்திலும் அரசியல் பழிவாங்கல்கள்'

Princiya Dixci   / 2017 ஜனவரி 21 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள், நல்லாட்சி அரசாங்கத்தில் தொடர்ந்து அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்வாங்கப்படுவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் ஏ.எம். அப்துல் மஜீட் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொத்துவில் தேர்தல் தொகுதியில் நியமிக்கப்பட்டுள்ள பிரதேச அமைப்பாளர்கள் அறிமுக நிகழ்வும் எதிர்கால அபிவிருத்தி திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, அக்கரைப்பற்று தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் சுற்றுலா விடுதியில் இன்று (21) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
தொடர்ந்து அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில்,
 
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களான அரசாங்க உத்தியோகத்தர்கள், தாபன விதிக் கோவைக்கு முரணான இடமாற்றம் செய்யப்படுவதை வன்மையாக கண்டிக்கின்றேன்.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைவாக பொத்துவில் தேர்தல் தொகுதியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பிரதேச செயலக ரீதியாக அமைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதோடு அங்கத்தவர்கள் சேர்த்துக் கொள்வதற்கான வேலைத் திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் என்று தெரிவித்தக் கொண்டு போலி அமைப்பாளர்கள் ஒரு சில நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். இவர்களை இனங்கண்டு சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலி அமைப்பாளர்கள் மீது மக்கள் ஏமாற வேண்டாம்.
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இப் பிரதேசத்தின் உத்வேகத்துடன் செயற்படுகின்றது. எதிர்காலத்தில் இப் பிராந்தியங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிடும்.
 
தற்போது எமது பிரதேசத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஆலோசனைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முன்வைத்துள்ளோம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் செய்து பல அபிவிருத்தித் திட்டங்களை அங்குராப்பணம் செய்து வைப்பதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
எதிர்வரும் ஒரு வார காலத்துக்குள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் மாநாட்டை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கு அமைச்சரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான துமிந்த திஸாநாயக்கா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் இணைப்புச் செயலாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான சாந்த பண்டார உட்பட கட்சியின் உயர் பீட உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
இம் மாநாட்டுக்கு பொத்துவில், ஆலையடிவேம்பு, திருக்கோவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் நிந்தவூர் மற்றும் காரைதீவு ஆகிய பிரதேசங்களில் இருந்து 500ற்கு மேற்பட்ட இளைஞர், யுவதிகள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.
 
இப் பிராந்தியத்தின் அபிவிருத்தி மட்டுமல்லாது இளைஞர் யுவதிகளின் தொழில் வாய்ப்பு தொடர்பாகவும் இம் மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது.
 
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அக்கரைப்பற்று பிரதேச அமைப்பாளராக ஐ.எச்.ஏ. வஹாப், அட்டாளைச்சேனை பிரதேச அமைப்பாளராக கலாநிதி வை.எல். நிஸார் ஹைதர், நிந்தவூர் பிரதேச அமைப்பாளராக வை.எல். சுலைமாலெப்பை, காரைதீவு பிரதேச அமைப்பாளராக ஏ.எம். ஜாகிர் ஆகியோர் கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X