2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

புத்தர் சிலைகளை உடைத்தவர்களை கைதுசெய்ய விசேட பொலிஸ் குழு

Princiya Dixci   / 2017 ஜனவரி 23 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன் ஆனந்தம்

திருகோணமலை மாவட்டத்தில் சில இடங்களில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களைக் கைதுசெய்யும் நோக்கில், எட்டு விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இக் குழுக்களில் நான்கு குழுக்கள் சிவில் உடையிலும் ஏனைய நான்கு குழுக்கள் சீருடையிலும் செயற்படும் வண்ணம் நியமிக்கப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகப்  பொலிஸார் தெரிவித்தனர்.

கிழக்குப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்கவின் ஆலோசனைக்கு அமைய திருகோணமலைக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமால் பெரேராவின் மேற்பார்வையில், இவ்விசேட பொலிஸ் குழுக்கள்  நியமிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அண்மைக்காலங்களில், திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களில் ஆங்காங்கே புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டிருந்தன.

இவ்வாறு புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்களைக் கைதுசெய்யும் நோக்கில், இப்பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபர்கள் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சில புத்தர் சிலைகள் மற்றும் விகாரைகளுக்குப் பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .