2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ரேணுகா சிட்டி ஹொட்டல்ஸ் ஊழியர்களுக்கு‌ கௌரவிப்பு

Gavitha   / 2017 ஜனவரி 23 , பி.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரேணுகா சிட்டி ஹொட்டல்ஸில் நீண்ட காலமாக பணியாற்றிய 46 ஊழியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. ரேணுகா சிட்டி ஹொட்டல்ஸ் பிஎல்சி மற்றும் ரேணுகா ஹொட்டல்ஸ் லிமிட்டெட் தலைவர் ரவி தம்பிஐயா, இவர்களுக்கான நினைவுச்சின்னங்களை வழங்கியிருந்தார். இவருடன் ஏனைய பணிப்பாளர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். ஹொட்டலில் நீண்ட காலம் பணியாற்றும் ஊழியர்களைக் கௌரவிக்கும் மூன்றாவது நிகழ்வாக இது அமைந்திருந்தது.  

இவ்வாறு கௌரவிப்பைப் பெற்றவர்களில், 28 பேர், ஹொட்டலில் 12 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றிய அனுபவத்தைக் கொண்டுள்ளனர். இவர்களுக்கு தங்க பதக்கங்கள் வழங்கப்பட்டன. 28 ஊழியர்களில் 17 பேர் ஹொட்டலில் சுமார் இரண்டு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக பணியாற்றியிருந்தனர். ஹொட்டலில் நீண்ட காலமாகப் பணியாற்றும் ஊழியர்களில் ஒருவரான கார்மென் ஜோசப் கருத்துத் தெரிவிக்கையில், “நான் ஹொட்டலில் நான்கு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக பணியாற்றுகிறேன். இது விறுவிறுப்பான துறையாகும். ஓவ்வொரு நாளும் புதிய அனுபவத்தைப் பெற முடிகிறது. புதிய நபர்களையும், புதிய சவால்களையும் எதிர்கொள்ள முடிகிறது. தம்பையா மற்றும் அவரின் பணிப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.  

ஆறு வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய மேலும் 18 பேருக்கு, அன்பளிப்பு வவுச்சர்கள் பரிசாக வழங்கப்பட்டிருந்தன. தலைவர் ரவி தம்பிஐயா கருத்துத் தெரிவிக்கையில், “எமது உள்ளக பயிற்சிகளில் நாம் அதிகளவு கவனம் செலுத்துவோம், எனவே எமது ஊழியர்களுக்கு எமது கலாசாரம் மற்றும் விருந்தோம்பல் பற்றி ஆரம்பம் முதல் அறிந்து கொள்ள முடியும். இந்த முறையின் மூலமாக, அவர்கள் ஹொட்டலில் நிலைத்திருப்பதற்கு பெரிதும் பயனுள்ளதாக அமைந்துள்ளது” என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .