2024 மார்ச் 28, வியாழக்கிழமை

OPPO இலங்கையில் விஸ்தரிப்பு

Gavitha   / 2017 ஜனவரி 23 , பி.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

OPPO, இலங்கையில் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், 2016 முழுவதும் பல்வேறு விதமான வாடிக்கையாளர் கட்டியெழுப்பல் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தது. இதில் புத்தம் புதிய அலைபேசி மாதிரியான சாம்பல் நிற OPPO F1sகளின் அறிமுகமும் உள்ளடங்கியிருந்தது. இது தற்போது சந்தையில் விற்பனைக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  

நிறுவனத்தின் “Selfie-Expert” கெமரா ஃபோன்கள் வரிசையில் ஒன்றாக F1s அமைந்துள்ளது. OPPO F1sஇல் காணப்படும் விசேட அம்சமாக, முன்புற கெமரா 16MP திறனைக் கொண்டுள்ளதுடன், 3 GB RAM மற்றும் 32 GB ROM ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பின்புற கெமரா  13MP திறனைக் கொண்டுள்ளது.  

சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, துறையில் விசேட நிலையைக் கொண்டுள்ள OPPO, உயர் தரம் வாய்ந்த பொருட்கள் மற்றும் பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியடையக்கூடிய அனுபவத்தையும் பெற்றுக்கொடுக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளதுடன், ஒப்பற்ற புத்தாக்கத்தையும் வழங்குகிறது.  

ஆசியா மற்றும் உலகின் ஏனைய பகுதிகளிலும் அதிகளவு புகழ்பெற்ற நாமமாக OPPO வளர்ச்சியடைந்த வண்ணமுள்ளது. இதில் உயர் தரம் வாய்ந்த தயாரிப்புகள் மற்றும் ஒப்பற்ற சகாயத்தன்மை போன்றன அடங்கியுள்ளன. உலகில் நான்காவது சிறந்த திறன்பேசி விற்பனையாளராக OPPO, International Data Corporation (IDC) இனால் 2016இல் தெரிவு செய்யப்பட்டிருந்தது. OPPO அதிகளவு புகழ்பெறாத நாமத்திலிருந்து உலகின் நான்காவது மாபெரும் நாமமாக 2016இன் இரண்டாம் காலாண்டில் தெரிவாகியிருந்தது. வருடாந்த அடிப்படையில் 136 சதவீத விற்பனை அதிகரிப்பையும் பதிவு செய்திருந்தது. இரண்டாவது காலாண்டில் சர்வதேச சந்தையில் அதிகரிப்பைப் பதிவு செய்திருந்ததுடன், உள்நாட்டு சந்தையில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பை OPPO Sri Lanka பதிவு செய்திருந்தது.  

வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற சேவைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு, குறிப்பிடத்தக்களவு பிரத்தியேகமான OPPO Sri Lanka காட்சியறைகளை கொண்டுள்ளது. வசதிகள் படைத்த விற்பனைக்கு பிந்திய சேவை நிலையங்களையும் கொண்டுள்ளது. டயலொக், அபான்ஸ் மற்றும் சிங்ககிரி போன்ற காட்சியறைகளிலும் OPPO திறன்பேசிகளைக் கொள்வனவு செய்ய முடியும்.  

OPPO நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொம் சௌ கருத்துத் தெரிவிக்கையில், “நாம் எப்போதும், எமது வாடிக்கையாளர்களின் தேவைகள் குறித்து கவனம் செலுத்துகிறோம். எமது வலிமைகளில் ஒன்றாக இது அமைந்துள்ளது. வாடிக்கையாளர்கள் OPPO மீது அதீத ஈடுபாட்டை வெளிப்படுத்த இதுவும் பிரதான காரணம். வாடிக்கையாளர்களுக்கு என்ன வேண்டும் என்பதைப் புரிந்து கொள்வது கடினமான காரியமாக அமைந்திருந்த போதிலும், இந்தத் தேவையை நிவர்த்தி செய்ய OPPO ஐச் சேர்ந்த நாம் எப்போதும் முயற்சிகளை மேற்கொண்ட வண்ணமுள்ளோம். இதற்காக புத்தாக்கமான மற்றும் ஆக்கபூர்வமான வழிமுறைகளைப் பின்பற்றுகிறோம். OPPO தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி திறனுடன் இந்த தேவைகளை நிவர்த்தி செய்யும் திறனை நாம் கொண்டுள்ளோம்” என்றார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X