2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

பெப். 1 முதல் பஸ் சாரதிகள், நடத்துநர்கள் சீருடை அணிவது கட்டாயம்

Princiya Dixci   / 2017 ஜனவரி 24 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல், பஸ் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள், சீருடை அணிவதைக் கட்டாயமாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பஸ் சாரதிகளும், நடத்துநர்களும் தங்களின் கடமைக்கான அடையாள அட்டையை அணிந்திருப்பதும் கட்டாயமாகும் என, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஜீ.ஏ. ஹேமச்சந்திர தெரிவித்தார்.

இந்த விதிமுறைகளைப் பின்பற்றாதவர்களிடம் அபராதம் அறவிடுதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், பஸ் நடத்துநர்கள் தொடர்பில் கிடைக்கும் முறைபாடுகளின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதாகச் சுட்டிக்காட்டிய தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர், இத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு, சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கான சீருடை மற்றும் கடமைநேர அடையாள அட்டை கட்டாயமாக்கப்படுவதாகத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .