கோடரியால் தாக்கி கர்ப்பிணி பெண் படுகொலை: இருவர் கைது
24-01-2017 03:15 PM
Comments - 0       Views - 352

-செல்வநாயகம் கபிலன்

ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் கர்ப்பிணி பெண், கோடரி வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

7 மாத கர்ப்பிணியான ஞானசேகரம் ஹம்சிகா (வயது 25) என்பவர் மீதே இவ்வாறு கோடாரி வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு குழந்தையின் தயான இப்பெண்ணின் வீட்டுக்குள், திருடும் நோக்கோடு இன்று  மதியம் அத்துமீறி நுழைந்த கொள்ளையர்கள், கோடாரியால் கொத்தியுள்ளனர்.

இரத்த வெள்ளத்தில் இருந்த பெண்ணைக் கண்ட அயலவர்கள்,  உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற போதும் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டதாக, பொலிஸார் கூறினர்.

இவர் அணிந்திருந்த நகைகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில்  இருவரை கைது செய்துள்ளதா கூறினர்.

"கோடரியால் தாக்கி கர்ப்பிணி பெண் படுகொலை: இருவர் கைது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty