2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மீள்குடியேற்ற அமைச்சு ரூ. 1,283.4 மில்லியன் வழங்கியது

Niroshini   / 2017 ஜனவரி 24 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில், மீள்குடியேற்ற அமைச்சினூடாக வழங்கப்பட்ட 1,283.4 மில்லியன் ரூபாய் நிதியில்   பல்வேறு அபிவிருத்தித்  திட்டங்கள், கடந்த வருடம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதில், 1184.12 மில்லியன் ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளதுடன் எஞ்சியுள்ள 99.28 மில்லியன் ரூபாய் நிதி, இந்த ஆண்டில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு செலவிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிடைக்கப்பெற்ற நிதியில், 4508 வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதாவது 1035 புதிய வீடுகளை நிர்மானிப்பதற்கு 828 மில்லியன் ரூபாவும் 170 சேதமடைந்;த வீடுகளை திருத்துவதற்கு 34 மில்லியன் ரூபாவும் 1031 புதிய மலசலகூடங்கள் நிர்மானிப்பதற்கு 55 மில்லியன் ரூபாவும் குடிநீர்த்தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு 64 குழாய்க்கிணறுகள் அமைப்பதற்கும் 15 விவசாயக்கிணறுகளை அபைப்பதற்கும் 203 திறந்த கிணறுகளை அமைப்பதற்கும் 405 குடும்பங்களுக்கு இலவச குடிநீர் வசதிகளை ஏற்படுத்துவதற்கு 100 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளன எனத்தெரிவித்த அவர் உட்கட்டுமான அபிவிருத்திகளுக்கு கிடைக்கப்பெற்ற 105 மில்லியன் ரூபாவில் 81 வேலைத்திட்டங்கள் முன்னெடுக்;கப்பட்டு திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை ஆயிரத்து 500 குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்குதல் மற்றும் கேப்பாப்புலவு கிராமத்தில் நான்கு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக 11 மில்லியன் ரூபாவும் கிடைக்கப்பெற்று மேற்படி வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 1037 புதிய வீடுகள் அமைக்கும் பணிகள் 107 கிராம அலுவலர் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பெண்களைத் தலைமை தாங்கும் குடும்பங்களுக்காக 224 வீடுகளும் மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட குடும்பங்களுக்காக 122 வீடுகளும் இறப்புக்கள் அல்லது காணாமல் போனவர்களைக் கொண்ட குடும்பங்களுக்காக 222 வீடுகளும் புனர்வாழ்வு பெற்றமுன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு 187 வீடுகளும் ஏனைய சாதாரண பாதிப்புக்களை  கொண்ட குடும்பங்களுக்கான 282 வீடுகளுமாக 1037 வீடுகளுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்;ளமை குறிப்பிடத்தக்கது,


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .