சம்பியனானது கல்முனை றிநௌண்
16-01-2017 09:17 AM
Comments - 0       Views - 76

காரைதீவு விளையாட்டுக் கழகம் நடாத்திய மாபெரும் கடினபந்து இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரின் சம்பியன்களாக, கல்முறை றிநௌண் விளையாட்டுக் கழகம் தெரிவாகியுள்ளது. தயா - மதி ஞாபகார்த்தக் கிண்ணத்துக்காக நடத்தப்பட்ட இத்தொடரில் கல்முனை லெஜென்ட்ஸ் அணியைத் தோற்கடித்தே, றிநௌண் அணி சம்பியனானது.

34 அணிகள் பங்குபற்றிய இத்தொடரின் இறுதிப் போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற றிநௌண் அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய றிநௌண் அணி, 20 ஓவர்களின் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களைக் குவித்தது. அவ்வணி சார்பாக நிஸாம் 31 பந்துகளில் 42 ஓட்டங்களையும் றில்வான் 19 பந்துகளில் 30 ஓட்டங்களையும் பிர்தோஸ் 10 பந்துகளில் 21 ஓட்டங்களையும் தனிஸ் 9 பந்துகளில் 20 ஓட்டங்களையும் கைப்பற்றினர். பந்துவீச்சில் சப்ராஸ், மிகச்சிறப்பாகப் பந்துவீசி, 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

165 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு களமிறங்கிய கல்முனை லெஜென்ட்ஸ் அணி, 20 ஓவர்களின் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 29 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இதன்படி, இத்தொடரின் சம்பியன்களாக, கல்முனை றிநௌண் அணி தெரிவாகியது. துடுப்பாட்டத்தில் கல்முனை லெஜென்ட்ஸ் சார்பாக அஹ்னாப் 30 பந்துகளில் 39 ஓட்டங்களையும் இக்‌ஷான் 18 பந்துகளில் 17 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் நிஸாம் 3 விக்கெட்டுகளையும் நில்சாட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

இப்போட்டியின் நாயகனாக, நிஸாம் தெரிவுசெய்யப்பட்டார்.

கல்முனை நகரில், அண்மைக்காலமாக வெற்றிகள் பலவற்றைப் பெற்றுவரும் கல்முனை றிநௌண் அணி, ஓராண்டுக்குள் மாத்திரம் 3 சம்பியன் பட்டங்களைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

"சம்பியனானது கல்முனை றிநௌண்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty