யாராய் ஆவது?
27-01-2017 11:26 AM
Comments - 0       Views - 54

எல்லா நினைவுகளையும்
தூக்கியெறிந்துவிட்டு  
நிதானமாக யோசிக்கிறேன்  
பூச்சியத்தில் தொடங்கி  
பூச்சியத்தில் முடியும்
வாழ்க்கை  
பிரச்சினைகளுடன்
வாழ்வதற்கான
போராட்டம்  
தோற்றுப்போன
மனிதர்களுக்கு மத்தியிலும்  
நாளைகள் பற்றி
யோசிக்காத  
சிந்தனைச் சூனியங்களுக்கு
மத்தியிலும்  
தொடரும் தேடல்
பிணங்களாக  
காய்க்கும் வரைக்
கணக்கிலெடுக்கப்படாத
மரங்கள்  
காய்த்தோய்ந்த பின்
கவனிக்கப்படாத மரங்கள்  
நன்றிகெட்ட
உள்ளங்களுக்கு மத்தியில்
பயணம்  
துரதிர்ஷ்டம்  
அவ நம்பிக்கையால்
கொன்று  
கேலிகளால் தோற்கடித்து  
ஆட்டம் காணச் செய்ய  
ஆயிரமாயிரம் திட்டங்கள்  
எதைவிடுவது? எதைச்
செய்வது?  
வேகத்தின்
மீதான தடைகள்.  
வாழ்க்கை தேர்ந்த
ஆடுகளம்  
ஆடித்தான் வெல்ல
முடியும்  
நியதிப்படி கடினமும்
இலகும்  
நானும் என் பாடுமெனப்  
பெறுமானமற்றுப்  
பதுங்கிய மனிதர்களில்
ஒருவனாய்  
மாறவேண்டுமாய்
நிர்ப்பந்திக்கும் காலம்  
யாராகமாறுவது?  
எல்லோரையும் வஞ்சிக்கும்
சுயநலமி!  
கண்ணீரைக்
கவணியாகயவன்  
மனிதமுள்ள மனிதன்  
ஒரு முடிவை நோக்கி  
வாழ்வு  நகர்ந்து
கொண்டேயிருக்கிறது. 

"யாராய் ஆவது?" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty