கண்டிச்சீமை விமர்சன போட்டி: முடிவு திகதி நீடிப்பு
27-01-2017 11:33 AM
Comments - 0       Views - 16

மலையக சமூக ஆய்வாளரும் ஊடகவியலாளரும், மொழிபெயர்ப்பாளருமான சட்டத்தரணி இரா.சடகோபனின் கோப்பிக்கால வரலாற்று ஆவண நூலான ‘கண்டிச்சீமையிலே’ நூல் பற்றிய சிறந்த விமர்சன ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன.  

தெரிவு செய்யப்படும் ஒவ்வொரு ஆக்கத்துக்கும் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் ரூ.5,000  பரிசாக வழங்க, கண்டி நெலும் பெஷன் நிறுவன அதிபர் எம்.ஸ்ரீகாந்தன் முன்வந்துள்ளார்.  

இப்போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. முடிவு திகதி மார்ச் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஆக்கங்களை மலைநாட்டு எழுத்தாளர் மன்றம், கண்டிச்சீமை விமர்சனப் போட்டி, 152, 1/5, ஹல்ப்ஸ்டோர்ப் வீதி, கொழும்பு - 12 என்ற முகவரிக்கு அல்லது மின்னஞ்சல் முகவரியான updrf@yahoo.comக்கு அனுப்பி வைக்கலாம். மேலதிக விவரங்களுக்கு, 077-7 679231 என்ற அலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொள்ளவும்.    

"கண்டிச்சீமை விமர்சன போட்டி: முடிவு திகதி நீடிப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty