பொலிஸ் சாரதி கொலை: அடையாள அணிவகுப்பு
29-01-2017 06:49 PM
Comments - 0       Views - 155

-துஷார தென்னகோன்

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்கவின் சாரதியான பொலிஸ் சார்ஜன்ட் டி.பீ.விஜேயநாயக்க கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர், அடையாள அணிவகுப்புக்கு இன்று உட்படுத்தப்பட்டார்.

சனிக்கிழமை இடம்பெற்ற இந்தக் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில், பொலன்னறுவை, புதிய நகரைச் சேர்ந்த இசுறு எனப்படும் சோதிமானலாகே மகேஸ் தனுஷன் (வயது 29) என்பவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், குற்றப்புலனாய்வு அதிகாரிகளால், பொலன்னறுவை மாவ்ட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டு  அடையாள அணிவகுப்புக்கு சந்தேகநபர்  உட்படுத்தப்பட்டார்.

"பொலிஸ் சாரதி கொலை: அடையாள அணிவகுப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty