செய்திகள் எட்டுத்திக்கும் பரவும்
03-02-2017 08:53 AM
Comments - 0       Views - 50

என்றும் முறைகேடான, தரம்கெட்ட செய்திகளை உங்கள் நண்பர்களுக்குச் சொல்ல வேண்டாம். இந்தச் செய்திகள் எட்டுத்திக்கும் பரவும். இந்தத் தவறான பழக்கம் உங்களைப் பொய்யர்களாக்கலாம். 

கெட்ட விடயங்களைக் கேட்பதுவே கெட்ட பழக்கம். அதனை மற்றவர்களிடம் பகர்வதோ மகாபாவம். 

இன்று யாரோ ஒருவரின் அந்தரங்கங்களை அவருடன் சம்பந்தமேயில்லாத நபர்கள் அறியவிரும்புவது கேலிக்குரிய, அர்த்தமற்ற விசயம் ஆகும். இதனால் என்ன வருமானத்தைப் பெறப்போகின்றார்கள்.  

வம்பு பேசுவதால் இன்பம் வந்துவிடுவதில்லை. இது துன்பத்தைத் ​தேடும் வழி. பிறர் பெறும் வலி கண்டு, சந்தோசம் கொள்ளுதல் அரக்க குணமாகும். நல்லதைப் பகர்ந்து கொள்ளுக; அல்லாததை அகற்றி விடுக.  

 

வாழ்வியல் தரிசனம் 03/02/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்  

"செய்திகள் எட்டுத்திக்கும் பரவும்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty