காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு
05-02-2017 02:35 PM
Comments - 0       Views - 321

-செல்வநாயகம் கபிலன்

கீரிமலை, நல்லிணக்கபுரம் பகுதியில் சனிக்கிழமை, காணாமல் போன கஜேந்திரகுமார் கஜீபன் (வயது 10) என்றச் சிறுவன், நீர்த்தொட்டியில் வீழ்ந்து உயிரிழந்த நிலையில், சடலமாக  இன்று மீட்கப்பட்டுள்ளான்.

நேற்று மாலை, தனது வீட்டில் இருந்து அம்மம்மாவின் வீட்டுக்குச் சென்ற சிறுவன், காணாமல் போயுள்ளான். இந்நிலையில், பாழடைந்த தொட்டியில்  இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நீர்த்தொட்டி, ஆரம்ப காலத்தில் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை வாகனங்களை சுத்தரிகரிப்பதற்கு அமைக்கப்பட்டிருந்ததாகவும், அது தற்போது கைவிடப்பட்டிருந்த நிலையில், மழை நீர் நிறைந்து காணப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு வந்த மல்லாகம் மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம், தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

"காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty