இது வெறும் மயக்கம்
06-02-2017 10:21 AM
Comments - 0       Views - 24

ஆனந்தம் அடைதல் என்பது, எமது அகத்தினூடாக ஜொலிக்கும் உணர்வுதான் என அறிக; உள்மனத்துக்குள் தூய்மை குடிகொண்டால் மாத்திரமே இந்தநிலை நிரந்தரமாகி விடும் என்பதை உணர்க! 

மனித சுபாவம் மாறியபடி இருக்கும் என்பதற்காக, நாங்களும் நற்குணங்களைக் கோணலாக்கக் கூடாது.  

சௌகரியமாக வாழ, நிரந்தரமான அமைதி தேவையானது. இதற்காக நியாயம், நீதி முறைமைகளை விற்ற முடியாது. துன்பங்களை உலக ஷேமங்களின் பொருட்டுத் தாங்குபவனுக்கு அகத்தினூடு வெற்றிக் களிப்பு, மனோதைரியம் எல்லாம் தானாகப் புறப்படுகிறது.   காசு செலவு செய்தால்த்தான் களிப்புக் கிட்டும் என்ற மனோநிலை வந்துவிட்டது. இது வெறும் மயக்கம்; மாயை. உள்மன​த்தைக் கண்டு தெளியாமல், எதிலும் பூரணத்துவம் இல்லை. 

 

வாழ்வியல் தரிசனம் 06/02/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்   

 

"இது வெறும் மயக்கம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty