ஒரு பெரியவர் சொன்ன கதை இது
07-02-2017 10:22 AM
Comments - 0       Views - 88

ஒரு பெரியவர் சொன்ன கதை இது. திருமணமாகியும் பல வருடங்களாகக் குழந்தை பிற்காமையினால் ஓர் ஆச்சிரமத்திலிருந்து ஒரு பெண் குழந்தையைத் தத்து எடுத்து வளர்த்தனர். 

சில வருடங்களுக்குள் அவர்களுக்கு ஒரு குழ​ந்தை பிறந்துவிட்டது. சில மாதங்களுக்குப் பின்னர் இந்தத் தம்பதியினர், ‘எமக்குத்தான் குழந்தை பிறந்துவிட்டதே’ என எண்ணி, வளர்த்த பிள்ளையை அதே ஆச்சிரமத்தில் மீண்டும் சேர்த்து விட்டனர். 

ஆனால், துர்அதிஷ்டவசமாக அவர்களுக்குப் பிறந்த பிள்ளை இறந்துவிட்டது. அவர்கள் மீண்டும் ஒரு குழந்தை பெற்றுக்கொள்வதற்காக வைத்தியரிடம் சென்றனர், தாய்மையாகும் பாக்கியம் இனிமேல் கிடையாது என, வைத்தியர் கையை விரித்துவிட, மீண்டும் அதே ஆச்சிரமத்துக்குச் சென்று, முன்னர் ஒப்படைத்த குழந்தையை மீண்டும் பெற்றுக்கொண்டனர் 

அந்தப் பிள்ளை இவர்களிடம் கேட்ட முதற்கேள்வி, “அம்மா, தம்பிப்பாப்பா சுகமாக இருக்கிறானா”? தூய அன்பின் வியாபகம் எங்கே இருக்கின்றது பார்த்தீர்களா?

வாழ்வியல் தரிசனம் 07/02/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்  

"ஒரு பெரியவர் சொன்ன கதை இது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty