புதிய தலைமுறை நம்புமா?
08-02-2017 09:50 AM
Comments - 0       Views - 46

அந்த நாள் நினைவுகளில் மனம் நனைகிறது. எங்கும் பச்சை வண்ணக் கிராமங்களில், வீட்டு வளவுகளில் நெடிதுயர்ந்த பனை, தென்னை, மா, பலா, வாழை மரங்க​ள் நிறைந்திருந்தன. இவையே எமது கிராமங்களின் அரண்களாயின.  

வசந்த காலத்தில் விடியவிடியக் கூத்து, இசைக் கச்சேரிகள், கலை, விளையாட்டு நிகழ்வுகள் கோவில்களில் நடைபெறும். மக்கள் கோவில் வீதிகளில், ஓலைப்பாயில் ஒய்யாரமாக இருந்து இரசனையுடன் இவற்றினைப் பார்ப்பார்கள். 

இன்றோ சுட்டெரிக்கும் இரவுகளாகி விட்டன. பனை, தென்னை ஓலைகளால் வேய்ந்த மண்வீடுகளைப் போல், குளிர்சாதனம் பொருத்திய வீடுகள் ஈடாகுமா? அந்தக் குளுமைமிகு இன்ப இராச்சியம் எங்கே போயிற்று? எங்கள் உயிர்த்தாவரங்களும் வனப்பும் வாழ்வும் சரித்திரம் போலாயிற்று. அது நிஜம் என்று புதிய தலைமுறை நம்புமா? 

மனித மனங்கள் சூரிய வெப்பத்தைவிட, அதிகமாகக் கொதித்துக் கொண்டிருக்கின்றது. இயற்கையைத் தொலைத்து அரசியலால் அல்லாடும் இனம் நாம். 

 

வாழ்வியல் தரிசனம் 08/02/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்

"புதிய தலைமுறை நம்புமா?" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty