‘நரிக் கதையாம்’
09-02-2017 10:49 AM
Comments - 0       Views - 19

ஜே.ஏ.ஜோர்ஜ்

“நல்லாட்சி அரசாங்கமானது, 2020இல் கவிழ்ந்துவிடும் என்று நினைப்பவர்களின் நிலை, நரிக் கதையாகவே முடியும். ராஜபக்ஷ காலத்தில் அதிகாரத்தில் இருந்தவர்களின் பொக்கற்றுகளுக்குள் சென்ற மதுபான வரியானது, இன்று மக்களுக்கே கிடைக்கின்றது” என, நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பெர்ணான்டோ தெரிவித்தார். 

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நிதி அமைச்சின் கட்டளைச் சட்டங்களின் கீழான, கட்டளைகளை அங்கிகரிப்பதற்கான பிரேரணைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

“இதற்கு முன்னைய ஆட்சியில், எதனோல் கொள்கலன்களை கொண்டுவந்து மறைத்து வைத்து விற்பனை செய்தனர். அதனால், மதுவரி திணைக்களத்துக்கு கிடைக்க வேண்டிய வரி, இல்லாமற் போனது. நிதியமைச்சர் மற்றும் அரசாங்கம், அந்த வழிகளை அடைத்தமையால தான், அந்த வரிப்பணம் மதுவரித் திணைக்களத்துக்கு கிடைக்கின்றது,  

சிறைச்சாலைகளில் நீண்ட காலமாக சிறைவாசம் அனுபவிப்பவர்கள், அங்குள்ள சூழ்நிலைக்குப் பழகியுள்ளனர். புதிதாக சிறைக்குச் செல்பவர்களே, தேவையற்ற விடயங்கள் பற்றி கூறுகின்றனர். 

சிறைக்குச் சென்று, அவ்வாறான கதைகளை கேட்டு விட்டு வருபவர்கள்தான், தேவையற்ற கதைகளை கூறி, குழப்பத்தை ஏற்படுத்த முனைகின்றனர்” என்றும் அவர் கூறினார்.  

"‘நரிக் கதையாம்’" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty