உண்மையின் ஊற்று சிற்றறிவை விசாலமாக்கும்
09-02-2017 10:55 AM
Comments - 0       Views - 33

எத்தனை கோடானுகோடி உயிரினங்கள் இருப்பினும், அவை ஒவ்வொன்றும் புதுப்புது வார்ப்புகள்.​ ஹே, இறைவா! எதனைப் படைத்தாலும் நீ உன் கைங்கரியத்தினை, ஆழுமையினை, கலை நுட்பத்தை இம்மியளவும் பிசகாமல் எங்ஙனம் சிருஷ்டிக்கின்றாய்? 

எமக்கு மிகச்சிறிய கருமங்களைக்கூடச் சிறப்பாகச் செய்ய, எவ்வளவு கால அனுபவம் தேவைப்படுகிறது. எங்களை கணப்பொழுதும் எப்படி செதுக்கிக்கொண்டே இருக்கின்றாய்?   ஆஹா, பெருமானே! நீயே பெரும் சிற்பி. நீயோ எழுதுவதுமில்லை; படிப்பதுமில்லை. ஆனால், இந்தப் பேரண்டத்தையே ஆட்சி செய்கின்றாய்; அசைக்கின்றாய். 

உண்மையின் ஊற்றே எமது சிற்றறிவை விசாலமாக்கும்.

வாழ்வியல் தரிசனம் 09/02/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்  

"உண்மையின் ஊற்று சிற்றறிவை விசாலமாக்கும்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty