புதுக்குடியிருப்பு போராட்டம்: பிரதமர் பரிசீலனை; மக்கள் விடாப்பிடி
10-02-2017 10:07 AM
Comments - 0       Views - 69

சண்முகம் தவசீலன், ரொசேரியன் லெம்பர்ட்

அரச காணிகளை இராணுவத்தின் செயற்பாட்டுக்குப் பெற்றுக்கொண்டு, படையினர் வசமிருக்கும் பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு பரிசீலனை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ள போதிலும், தங்களுடைய போராட்டம் தொடருமென மக்கள் தெரிவித்துள்ளனர். தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்பாக ஏழாவது நாளாகத் தொடர்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  

அப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் சிலர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, அலரிமாளிகையில் நேற்று (09) சந்தித்து கலந்துரையாடினர்.  

இந்த சந்திப்பின்போது, காணிகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தம்மிடம் தெரிவித்ததாகவும், எனினும் காணிகள் விடப்படும் வரை தமது போராட்டம் தொடரும் என தாம் தெரிவித்ததாகவும் அச்சந்திப்பில் கலந்துகொண்ட மக்கள் தெரிவித்தனர்.  

நேற்றைய சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்கான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.  

 

"புதுக்குடியிருப்பு போராட்டம்: பிரதமர் பரிசீலனை; மக்கள் விடாப்பிடி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty