பெரியஉப்போடை புனித லூர்த்து அன்னையின் வருடாந்த திருவிழா
12-02-2017 10:39 AM
Comments - 0       Views - 40

வா.கிருஸ்ணா

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு பெரியஉப்போடை புனித லூர்த்து அன்னையின் வருடாந்த திருவிழா, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் கொடியிறக்கத்துடன் சிறப்பாக நிறைவுபெற்றது.

கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலயத்தின் திருவிழாவில் தினமும் திருப்பலி பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற்றுஅவந்தன.

ஆலயத்தின் பங்குத்தந்தை டெக்ஸ்டர் கிறே தலையில் திருவிழாவின் இறுதி விசேட திருப்பலி பூஜை, இன்று காலை நடைபெற்றது.

இந்த விசேட திருப்பலியை மட்டக்களப்பு, அம்பாறை மறை மாவட்டங்களின் ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை நடத்தினார்.

திருப்பலி பூஜையின் போது பக்தர்களுக்கு ஆயரினால் ஆசிகள் வழங்கப்பட்டதுடன், விசேட தேவ இசை நிகழ்வும் நடத்தப்பட்டது.

திருப்பலியை தொடர்ந்து சொரூபம் ஆலய முன்றிலுக்கு கொண்டுவரப்பட்டு, அங்கு விசேட பூஜைகள் நடைபெற்று கொடியிறக்கம் நடைபெற்றது.

"பெரியஉப்போடை புனித லூர்த்து அன்னையின் வருடாந்த திருவிழா" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty