சுயநலத்துக்காக இரப்பதே பிச்சை
13-02-2017 10:01 AM
Comments - 0       Views - 28

யாசகம், பிச்சை இரண்டுக்கும் நிரம்ப வேறுபாடு உண்டு. யாசகம் கேட்பவர் ஞானி. இவர் தனக்காக வாழ்வதுமில்லை; பசி ஏற்பட்டால் அந்த வேளைக்கான உணவை மட்டும் யாசகமாகக் கேட்பார்.  

ஆனால், பிச்சை கேட்பவர்கள் அப்படியானவர்கள் அல்லர். இவர்கள் சமானியர்கள். அவர்கள் எல்லா நேரங்களிலும் இரந்து கொண்டிருப்பார்கள். அவர்களில் சிலர் தேவைக்கு அதிகமாகப் பணம் வைத்திருப்பதாகப் பொலிஸார் தெரிவிப்பதுண்டு. 

சுயநலத்துக்காக இரப்பதே பிச்சையாகும். தங்கள் சுயநலத்துக்காக அடுத்தவரைச் சுரண்டுவது, பிச்சை எடுப்பதிலும் பார்க்க குறைவான, இழிவான செயலாகும். உழைக்க வலு இருப்போரை இரந்துவாழ அனுமதிக்கலாகாது. 

உழைக்காத ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டாம். 

 

வாழ்வியல் தரிசனம் 13/02/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்  

"சுயநலத்துக்காக இரப்பதே பிச்சை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty