காமமும் காதலும் அவனிடத்தே களையப்பட்டால்…
14-02-2017 10:06 AM
Comments - 0       Views - 78

மனிதனின் உண்மையான வீரம் என்ன? துறவுதான் மகா வீரம். காமமும் காதலும் அவனிடத்தே களையப்பட்டால், துறது என்பது தானாக வரும். இதனை அகம் சார்ந்தது எனலாம். ஆன்மாவுக்கான சுதந்திரம் எனவும் சொல்லலாம். 

இந்த உலகை ஆட்டுவிப்பதே காதலும் காமமும்தான். எல்லா உயிர்களுக்கும் பொதுவான தேவையுமானது. இதன் அகரபலம் அளவிடற்கரியது.  

ஆனால், இதனால் உயிர்கள் பிறப்பெடுப்பதும் கடும்துயர் அடைவதும் தவிர்க்க முடியாதது. 

ஏனெனில், இந்த உலகம் இயங்க வேண்டியுள்ளது. இது இறை சித்தம்.  

உன்பிறப்பை நீ தூய்மை ஏற்று! பிறப்பதை, இறப்பதைப் பற்றிப் பேசும் நாம், நடுவே உள்ள வாழ்க்கையைச் சீராக்குதலைப் பற்றியும் ஆழமாகச் சிந்தித்து எம்மை வலிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.  

அறம் பல செய்தல், துறத்தலை விட மேலானது. வாழ்க்கையின் நோக்கமும் இதுவே. 

 

வாழ்வியல் தரிசனம் 14/02/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்  

"காமமும் காதலும் அவனிடத்தே களையப்பட்டால்…" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty