இசைக் கலைஞர் அடெல் 5 விருதுகளை வென்று சாதனை
14-02-2017 05:27 PM
Comments - 0       Views - 122

இசை உலகின் உயர்ந்த விருதான 2017ம் ஆண்டுக்கான கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில்,லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஸ்டாப்லெஸ் சென்டரில் நடைபெற்றது.

இதன்போது பெண் இசைக் கலைஞர் அடெல் 5 விருதுகளை வென்று சாதனை படைத்தார். இவர் ‘ஆல்பம் ஆஃப் தி இயர்’, ‘ரெக்கார்டு ஆஃப் தி இயர்’ மற்றும் ‘சாங் ஆஃப் தி இயர்’ என 3 மிக முக்கிய விருதுகளை  2வது முறையாக பெறும் ஒரே இசைக்கலைஞர் என்ற புதிய சாதனையும் இவர் இதன்போது  படைத்துள்ளார்.

அத்துடன் இவரது ‘25’ என்ற இசை ஆல்பம், இந்த ஆண்டின் சிறந்த ஆல்பமாகவும் ‘ஹலோ’ என்ற ஆல்பம் சிறந்த ரெக்கார்டு மற்றும் பாடல் ஆகியவற்றுக்கான விருதுகளை அவருக்கு பெற்றுக் கொடுத்துள்ளமை குறிப்பிடதக்கதோர் விடயமாகும்.
 

"இசைக் கலைஞர் அடெல் 5 விருதுகளை வென்று சாதனை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty