வடகொரிய ஏவுகணைச் சோதனை: பாதுகாப்புச் சபை கண்டிக்கிறது
15-02-2017 09:08 AM
Comments - 0       Views - 16

ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியாக, டொனல்ட் ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டதையடுத்து, வடகொரியாவால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது ஏவுகணைச் சோதனைக்கு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை கண்டனம் வெளியிட்டுள்ளது. வடகொரியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையை இரட்டிப்பாக்குவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சியாக, இது காணப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளது.   

வடகொரியாவின் அணுசக்தி, ஏவுகணைச் சோதனைகள் தொடர்பாக, 2006ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகளின் மூலம் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளைத் தாண்டி, எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை குறிப்பிடவில்லை.  

கடந்த 20ஆம் திகதி, ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப பதவியேற்றதன் பின்னர், சர்வதேச சமூகத்துக்கு சவால் விடுக்கும்படியாக, ஏவுகணைச் சோதனையை வடகொரியா முன்னெடுத்திருந்தது. இது தொடர்பாக ​கருத்துரைத்த ஜனாதிபதி ட்ரம்ப், வடகொரியா மிகவும் பெரியதொரு பிரச்சினை என்றும் இது தொடர்பாக நாம் மிகவும் உறுதியாக சமாளிப்போம் என்றும் கூறியிருந்தார்.  

 “கொரிய ஜனநாயக மக்கள் குடியரசின் அனைத்து ஏவுகணைச் சோதனைகளையும் பாதுகாப்புச் சபையின் அங்கத்தவர்கள் கண்டிக்கின்றனர்” என்று, பாதுகாப்புச் சபையால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கடந்த ஒக்டோபர் 19ஆம் திகதி இடம்பெற்ற ஏவுகணை, சோதனை குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

 

"வடகொரிய ஏவுகணைச் சோதனை: பாதுகாப்புச் சபை கண்டிக்கிறது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty