பிறப்பும் இறப்பும் மாற்ற முடியாதது
15-02-2017 10:20 AM
Comments - 0       Views - 95

மானுட ஜனனம் என்றாலே பெரும் அவஸ்தைதான். அவனியில் பிறந்தவர்கள் இன்ப, துன்ப வலைக்குள் அகப்படாமல் இருக்க முடியாது.  

எனவே, அவன் பிறந்தால்த்தானே இறப்பு எனும் துன்பகரமான நிகழ்வு ஏற்படுகின்றது. இந்தக் கடவுள் ஏன்தான் இப்படிச் செய்கின்றானோ எனச் சொல்லி வருந்துபவர்கள் ஏராளம். 

சரி, இனிமேல் பூமியில் புதிதாக உயிர்கள் பிறப்பெடுக்க மாட்டா என வைத்துக் கொள்வோம். அடுத்து என்ன நடக்கும்? முதியவர் தொகை மட்டும் இருக்கும். 

மனித ஆயுள் நூறு வருடங்கள் என்றால், கால ஓட்டத்தில் மக்களே இருக்க மாட்டார்கள். மக்கள் குறையக் குறைய இருக்கும் முதியோரின் நிலை என்ன? 

உணவு, சுகாதாரம், பராமரிப்பு, புதிய கண்டுபிடிப்புகள், நிர்வாகம் எனப்பவற்றில் இளையவர்கள் பங்களிப்பு இன்றி உலகம் இயங்குமா? பூமி கால ஓட்டத்தில் ஸ்தம்பிதமாகி விடும் அல்லவா? 

எனவே, காரணத்துடனேயே காரியங்கள் நடக்கின்றன. பிறப்பும் இறப்பும் மாற்றமுடியாதது.  

 

வாழ்வியல் தரிசனம் 15/02/2017

- பருத்தியூர் பால. வயிரவநாதன்  

"பிறப்பும் இறப்பும் மாற்ற முடியாதது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty