பசுமை எரிசக்தி வெற்றியாளர் செயற்திட்டம் நிறைவு
16-02-2017 01:07 AM
Comments - 0       Views - 10

பசுமை எரிசக்தி வெற்றியாளர் போட்டியின் வெற்றியாளர்களாகத்தெரிவு செய்யப்பட்ட ஆனந்தா கல்லூரிக்கான பரிசினை உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கும் வகையில் இடம்பெற்ற நிகழ்வில், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கை, மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான ஜேர்மன் தூதுவரான ஜோர்ன் ரோட் ஆகியோர் ஒன்றிணைந்து கையளித்து வைத்துள்ளனர். “Harithananada” என்ற பெயரில் இடம்பெற்ற வைபவ ரீதியான நிகழ்வில் ஆனந்தா கல்லூரியின் விடுதிக்கு மின்வலுவைப் பிறப்பிக்கும் சூரியவலு PV தொகுதி அடங்கலான பரிசுகளை அவர்கள் கையளித்து வைத்துள்ளனர். மின்வலு மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சரான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, பிரதி அமைச்சரான அஜித் பெரேரா மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சரான வீ.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோரும் நிகழ்வில் அழைக்கப்பட்டிருந்த பிரமுகர்களில் உள்ளடங்கியிருந்தனர்.  

ஜேர்மன் வெளி விவகாரங்கள் அமைச்சு, இலங்கை மின்வலு மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு, செயற்றிட்ட அமுலாக்க பங்காளரான Deutsche Gesellschaftfür Internationale Zusammenarbeit (GIZ) Gmbh மற்றும் செயற்றிட்ட ஆதரவு பங்காளர்களான இலங்கை நிலைபேற்றியல் பேணல் எரிசக்தி அதிகார சபை மற்றும் இலங்கை எரிசக்தி முகாமையாளர்கள் சங்கம் ஆகியன ஒன்றிணைந்து இலங்கை பசுமை எரிசக்தி வெற்றியாளர் செயற்றிட்டத்தை முன்னெடுத்ததுடன், எரிசக்தி வினைதிறனை மேம்படுத்தி, 2016 கோடைகாலப்பகுதியில் மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை இலங்கையில் உபயோகிப்பதை ஊக்குவிக்கும் வகையில், புத்தாக்கமான எண்ணங்களை இனங்கண்டு, அவர்களுக்கு இனங்காணல் அங்கிகாரம் அளிக்கும் வகையில் இப்போட்டியானது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. பல்வேறுபட்ட ஊடகங்கள் வாயிலான பிரச்சாரம் மற்றும் நாடளாவிய ரீதியிலான பசுமை எரிசக்தி வெற்றியாளர் போட்டிஎன இச்செயற்றிட்டமானது இருமுனை அணுகு முறைகளின் கீழ் முன்னெடுக்கப்பட்டிருந்தது.  

"பசுமை எரிசக்தி வெற்றியாளர் செயற்திட்டம் நிறைவு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty