டொயோடா பற்றரிகள் அறிமுகம்
16-02-2017 02:08 AM
Comments - 0       Views - 17

கொழும்பில் நடைபெற்ற சிலோன் மோட்டர் ஷோ கண்காட்சியில், டொயோடா தனது பற்றரி வகையை அறிமுகம் செய்திருந்தது. டொயோடா வாகன மாதிரிகளுக்கென விசேடமாக வடிவமைக்கப்பட்ட இந்த பற்றரிகள், கடினமான சூழ்நிலைகளிலும் நீடித்து உழைக்கக்கூடியது என்பதுடன், குறைந்தளவு பராமரிப்பு அல்லது பராமரிப்பு தேவையற்றதாக அமைந்துள்ளது. 

அசல் டொயோடா பற்றரி, வாகனங்களின் குறிப்பிட்ட தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது. சந்தையில் காணப்படும் சாதாரண பற்றரிகள்            வெவ்வேறு வாகனங்களுக்கு பொருந்தக்கூடிய வகையில் அமைந்துள்ளதால், குறிப்பிட்ட வாகனமொன்றின் தேவைகளுக்கு மட்டும் பிரத்தியேகமாக பொருந்தும் வகையில் அமைந்திருக்கவில்லை. இதன் காரணமாக, வலு மற்றும் வினைத்திறனை கவனத்தில் கொள்ளும் போது, அதன் திறனை இழந்துவிடுகிறது. 

டொயோடா பொறியியலாளர்கள் அசல் டொயோடா பற்றரிகளைக் கொண்டுள்ளனர், இவை உயர் தர கல்சியம் அலொய் கட்டமைப்புகளைக் கொண்டதுடன், டொயோடா வாகன வகையைப் பொறுத்து, வௌ;வேறு அளவுகளில் பிரிக்கப்பட்டுள்ளன. வாகனத்தின் அசல் அளவில் பொருந்தும் தன்மை கொண்டதால், பற்றரி உயர் வினைத்திறனில் இயங்கக்கூடியது. துருப்பிடிக்காத நிலையில் பற்றரி இயங்கும் வகையில், தடிப்பான நேர்த்தியான கட்டமைப்பையும் கொண்டுள்ளதுடன், உறுதியான அலோய் உள்ளம்சங்களையும் இரட்டை மேற்பரப்பு பாதுகாப்பையும் கொண்டுள்ளது. இது திரவ இழப்பு மற்றும் அதிர்வுகளையும் பாதுகாக்கிறது. சிறந்த செயற்பாட்டுக்கான உயர் மட்ட சுழற்சியை பேணக்கூடியது. 

அசல் டொயோடா பற்றரிகளுக்கு, வாகன உரிமையாளர்கள் இலவச பராமரிப்பு சேவையை பெற்றுக்கொள்வார்கள், இரு வருட உத்தரவாதம் கொள்வனவு செய்த திகதியிலிருந்து வழங்கப்படும். மாதாந்தம் இலவசமாக மேற்பார்வை செய்தல் செயற்பாடுகளை டொயோடா அல்லது அங்கிகாரம் பெற்ற விநியோகஸ்த்தர்கள் மேற்கொள்வார்கள். இது இலவசமாக மேற்கொள்ளப்படும் என்பதுடன், பற்றரியில் பழுதுகள் ஏற்படும் நிலையில், உத்தரவாத காலப்பகுதியினுள் இலவசமாக மாற்றிக் கொடுக்கப்படும். நாடு முழுவதிலும் காணப்படும் டொயோடா லங்கா கிளைகள் மற்றும் அங்கீகாரம் பெற்ற முகவர்களிடமிருந்து பற்றரியை கொள்வனவு செய்ய முடியும். 

"டொயோடா பற்றரிகள் அறிமுகம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty