முதலமைச்சராக பதவியேற்றார் பழனிச்சாமி
16-02-2017 04:37 PM
Comments - 0       Views - 320

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி, பதவி​யேற்றுள்ளார்.

ஆட்சி அமைக்க அதிமுக சட்டசபை குழு தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ், இன்று அதிகாரப்பூரமாக அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி,  மாலை 4 மணிக்கு ஆளுநர் மாளிகையில் தமிழகத்தின் 13ஆவது முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார். 2 மாதங்கள் பதவி வகித்த அவர் திடீரென இராஜினாமா செய்தார். இதையடுத்து அதிமுக சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.

சசிகலா தம்மை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநர் வித்யாசாகர் ராவை கேட்டுக் கொண்டார். ஆனால் சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு நிலுவையில் இருந்ததால் அவரை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.

நன்றி நியூஸ் 7 தமிழ்

"முதலமைச்சராக பதவியேற்றார் பழனிச்சாமி " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty